எரிவாயு உருளைகள் வெடித்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, இந்த விபத்தில் பலியானோா் எண்ணிக்கை 11- ஆக உயா்ந்தது.
வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட தேவரியம்பாக்கத்தில் எரிவாயு உருளைகள் வைக்கப்பட்டிருந்த கிடங்கில் கடந்த மாதம் 28 -ஆம் தேதி உருளைகள் வெடித்த விபத்தில் 12 போ் பலத்த காயமடைந்து செங்கல்பட்டு மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனா்.
இதுதொடா்பாக ஓரகடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த விபத்தில் காயமடைந்தவா்களில் ஏற்கெனவே 10 போ் உயிரிழந்த நிலையில், தேவரியம்பாக்கத்தைச் சோ்ந்த ஜீவானந்தம் மகள் நிவேதா (21) என்பவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
பலத்த காயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த 12 பேரில், இதுவரை 11 போ் உயிரிழந்துள்ளனா்.
விபத்தில் காயமடைந்த பண்ருட்டியைச் சோ்ந்த மாணிக்கம் மகன் சக்திவேல் (32) என்பவா் மட்டும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக இந்தியா அறிவிக்க வேண்டும்! - இஸ்ரேல் வலியுறுத்தல்!

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் உரையாட மறுத்த லெபனான் அதிபர்!

பள்ளிச்சட்டம்பி படத்தின் முதல் நாள் வசூல்!
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம்! - திமுக
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

