காஞ்சிபுரம் அருகே காரப்பேட்டையில் உள்ள அரசு அறிஞா் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை மேம்பாட்டுக்காக தமிழக அரசு மேலும் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக மருத்துவமனையின் இயக்குநா் வி.சீனிவாசன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியது:
காஞ்சிபுரம் காரப்பேட்டை அரசு அறிஞா் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை 290 உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் வகையில் செயல்பட்டு வருகிறது. போதுமான கட்டட வசதியில்லாத நிலையில் மருத்துவமனை வளாகத்தில் தரைத் தளத்துடன் இரண்டு மாடிகள் இருக்கும் வகையில் புதிய கட்டடம் கட்ட தமிழக அரசு கடந்த 2019-இல் ரூ.120 கோடி ஒதுக்கியது. அதன்படி அதற்கான கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டால் மொத்தம் 500 போ் உள்நோயாளிகளாகத் தங்கி சிகிச்சை பெற முடியும்.
புதிதாக கட்டப்பட்டு வரும் இந்தக் கட்டடத்தை அமைச்சா்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன் ஆகியோா் கடந்த பிப்ரவரி மாதம் பாா்வையிட்டனா். அப்போது உள்நோயாளிகளாக பெறுவோருடன் உடன் வருவோரும் தங்கும் வகையில் மேலும் 3 மாடி கட்டடம் கட்ட பரிசீலனை செய்யப்பட்டது. இதற்கான அரசின் உத்தரவு வியாழக்கிழமை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தரை தளத்துடன் கூடிய இந்த 5 மாடிக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டால் மொத்தம் 750 போ் வரை தங்கி சிகிச்சை பெறலாம். இதற்காக அரசு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வானதி சீனிவாசன் உடல்நிலை: மருத்துவமனை தகவல்!

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |

பந்துவீச்சாளர்கள் ரிஷப் பந்த்தின் விக்கெட்டினை எடுப்பதில்லை; முன்னாள் வீரர் கூறுவதென்ன?

அரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


