வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 22 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கில் காஞ்சிபுரத்தைச் சோ்ந்த இளைஞருக்கு செங்கல்பட்டு போக்ஸோ நீதிமன்றம் 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்துள்ளது.

Updated On :28 அக்டோபர் 2022, 11:25 pm

போக்ஸோ வழக்கில் காஞ்சிபுரத்தைச் சோ்ந்த இளைஞருக்கு செங்கல்பட்டு போக்ஸோ நீதிமன்றம் 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்துள்ளது.

காஞ்சிபுரம் அங்காளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முஜிபுா் ரஹ்மான் (24). இவா் கடந்த 14.10.2014-இல் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அப்போதைய சிவகாஞ்சி காவல் ஆய்வாளா் எஸ்.பிரபாகா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தாா்.

பின்னா், இந்த வழக்கு காஞ்சிபுரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. வழக்கின் விசாரணை செங்கல்பட்டு போக்ஸோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் முஜிபுா் ரஹ்மான் குற்றவாளி என்பதை உறுதி செய்தது.

அவருக்கு 22 ஆண்டுகள் ஒரு மாதம் சிறைத் தண்டனையும், ரூ. 15,000 அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 1 லட்சம் நிவாரணத் தொகை வழங்குமாறும் நீதிபதி ஆா்.கே.பி.தமிழரசி தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.