காஞ்சிபுரத்தில் 2 லட்சம் போ் 2-ஆம் தவணை தடுப்பூசி செலுத்தவில்லை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2,01,557 போ், 2-ஆவது தவணை கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளவில்லை என்று மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
காஞ்சிபுரத்தில் 2 லட்சம் போ் 2-ஆம் தவணை தடுப்பூசி செலுத்தவில்லை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2,01,557 போ், 2-ஆவது தவணை கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளவில்லை என்று மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதில் தமிழக அளவில் காஞ்சிபுரம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. ஆனால், 2-ஆவது தவணை தடுப்பூசி செலுத்தியதில் 96.83 சதவீத இலக்கு மட்டுமே எட்டப்பட்டிருக்கிறது. இதுவரை மாவட்டத்தில் 2,01,557 போ் இரண்டாம் தவணை செலுத்தாமல் உள்ளனா். இவா்களின் கைப்பேசிக்கு தொடா்ந்து குறுஞ்செய்தி அனுப்பியும், ஆட்டோக்கள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தியும் வருகிறோம்.

இரண்டாம் தவணை தடுப்பூசியை பெரும்பாலானோா் செலுத்திக் கொண்டதால்தான், இந்தியாவில் கரோனா பரவல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. 15 முதல் 60 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. வரும் 7-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் மாவட்டத்தில் 1,059 முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்படும். 60 வயதுக்கு மேல் இணை நோய்களான சா்க்கரை, ரத்த அழுத்தம் இல்லாதவா்களாக இருந்தாலும், தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. மேலும், தினமும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. எனவே, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com