பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக திட்டமிட்டபடி நாளை பேரணி

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணி நாளை திட்டமிட்டபடி நடைபெறும் என பரந்தூர் விமான நிலைய கிராம மீட்பு ஒருங்கிணைப்புக் குழுவினர் அறிவித்துள்ளனர். 
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக திட்டமிட்டபடி நாளை பேரணி

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணி நாளை திட்டமிட்டபடி நடைபெறும் என பரந்தூர் விமான நிலைய கிராம மீட்பு ஒருங்கிணைப்புக் குழுவினர் அறிவித்துள்ளனர். 

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகள் வருகை மற்றும் சரக்குகள் கையாளும் நிலை அதிகரித்து வருவதை கணக்கில் கொண்டு இரண்டாவது பசுமை விமான நிலையம் உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டு மாநில அரசு ஒத்துழைப்புடன் செயல்பட திட்டமிட்டது. இதற்காக மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது . இறுதியாக காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் பகுதி தேர்வு செய்யப்பட்டு அதையொட்டி உள்ள 13 கிராமங்களையும் ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டது. இந்த அறிவிப்பு அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்பகுதியில் உள்ள நீர்நிலைகள், விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகள் என கையகப்படுத்தப்படும் என தெரியவந்தது.

மேலும் சுமார் 4,800 ஏக்கர் பரப்பளவு இந்த இரண்டாவது பசுமை விமான நிலையத்திற்கு தேவை என்பதால் இவை கணக்கெடுப்பட்டதாகவும் தெரிய வருகிறது. இதை எதிர்த்து ஏகனாபுரம், பரந்தூர் உள்ளிட்ட அனைத்து 13 கிராம பொதுமக்கள் தொடர்ந்து 145 வது நாட்களாக இரவு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கோட்டை நோக்கி பேரணி என அறிவித்த நிலையில் இரு அமைச்சர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை ஏற்பட்டு அந்த நிகழ்வை கைவிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும் அப்பகுதியில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாத வண்ணம் இருக்க காவல்துறை 13 சோதனை சாவடிகளை அமைத்து நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் கண்காணிப்பு பணி மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் நாளை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியை சந்தித்து மனு அளிக்க பேரணி மேற்கொள்வதற்காக காவல்துறையினம் அனுமதி கேட்டனர். ஆனால் அவர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியும் ஒருங்கிணைப்பு குழு அதனை மறுத்தால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்த பேச்சுவார்த்தை குறித்து ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் இளங்கோ கூறுகையில், தொடர்ந்து விளைநிலங்கள்,  நீர்நிலைகள் மற்றும் குடியிருப்புகளை அகற்றக் கூடாது என தொடர்ச்சியாக அரசை வலியுறுத்தி வரும் நிலையில் நாளை போராட்டத்தை கைவிடுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டதும் அதற்கு மறுப்பு தெரிவித்து போராட்டம் நடைபெறும் என தெரிவித்தாக கூறினார்.

மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் அன்னூர் பகுதியில் விவசாயிகள் அனுமதியின்றி விளைநிலங்கள் எடுக்கப்படாது என தெரிவித்த நிலையில், பரந்தூரில் மட்டும் அதற்கு விதிவிலக்கு இல்லையா எனவும் கேள்வி எழுப்பினர். விமான நிலையம் அமைக்க நீர்நிலைகள் விளைநிலங்களை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம் என தெரிவித்து நாளை கண்டிப்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து எங்கள் கோரிக்கையை அளிப்போம் எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com