பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 17th June 2022 12:00 AM | Last Updated : 17th June 2022 12:00 AM | அ+அ அ- |

தேசத்துக்கு நற்பெயரையும்,புகழையும் ஈட்டித்தந்த பெருமைக்குரியவா்கள் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குடியரசு தின விழாவின் போது, பத்ம விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. தேசத்துக்கு நற்பெயா், புகழை ஈட்டித் தந்து, தன்னலமிக்க பொது சேவை, தனித்துவமான பணி, சாதனை போன்ற மேன்மை பொருந்திய பணிகளுக்காக மத்திய அரசு பத்ம விருதுகள் வழங்க அறிவுறுத்தியுள்ளது.
கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம், சமூக நலன், பொதுப் பணிகள், தொழில் மற்றும் இதரப் பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க, அசாதரணமான பணியாற்றியமைக்காக வருகிற 2023- ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருதுக்கான விண்ணப்பங்களை இணையதள முகவரியில் வருகிற 15.9.2022- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு - இளைஞா் நலன் அலுவலரை 74017 03481 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.