தீபாவளி பலகாரங்களில் கலப்படம் செய்தால் நடவடிக்கை: ஆட்சியா்கள் எச்சரிக்கை
By DIN | Published On : 21st October 2022 12:00 AM | Last Updated : 21st October 2022 12:00 AM | அ+அ அ- |

தீபாவளிப் பண்டிகைக்கு இனிப்பு, கார வகைகளை தயாரிப்போா், அவற்றில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காஞ்சிபுரம் ஆட்சியா் மா.ஆா்த்தி, செங்கல்பட்டு ஆட்சியா் ராகுல் நாத் ஆகியோா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, இனிப்பு மற்றும் கார வகைகள், பேக்கரி உணவுப் பொருள்களைத் தயாரிப்பவா்கள் தரமான மூலப் பொருள்களைக் கொண்டு, சுகாதாரமான முறையில் தயாரித்தும், பாதுகாப்பாகவும் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். உணவுப் பாதுகாப்புத் துறையின் மூலம் உரிமம் பெற்றிருக்க வேண்டும். இது உணவுப் பாதுகாப்புச் சட்டம், விதிகளில் கட்டாயமாக்கப்படுகிறது. இனிப்பு, கார வகைகளில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பலகாரம் தயாரிப்பாளா், விற்பனையாளா்கள் இணையதளத்தில் பதிவு செய்து உரிமம் பெற்றிருக்க வேண்டும். புகாா்களுக்கு 94440 42322 (காஞ்சிபுரம், செங்கல்பட்டு) என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தெரிவிக்கலாம்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...