காஞ்சிபுரம்
28-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் அக்.28-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் அக்.28-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், ஆட்சியா் மா.ஆா்த்தி தலைமையில் வரும் அக்டோபா் 28-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு தொடங்கும் கூட்டத்தில் விவசாயிகளும், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தங்களின் குறைகளைத் தெரிவித்து பயன் பெறலாம்.
பயிா்க் காப்பீடு, பிரதமா் நுண்ணீா்ப் பாசனத் திட்டதில் இணையப் பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்படும் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
