காஞ்சிபுரம் அருகே நல்லூரில் ரூ. 50 கோடியில் சங்கரா செவிலியா் கல்லூரி கட்ட வியாழக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.
காஞ்சிபுரம் அருகே நல்லூரில் 4 ஏக்கா் பரப்பளவில் விடுதி வசதியுடன் சங்கரா செவிலியா் கல்லூரி கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. விழாவில் சங்கர கிருபா கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளையின் தலைவா் பம்மல் விஸ்வநாதன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினாா்.
பின்னா் அவா் கூறியது:
காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் அறக்கட்டளை சாா்பில் பல்நோக்கு மருத்துவமனையும், செவிலியா் கல்லூரியும் செயல்பட்டு வருகின்றன. தனியாா் கட்டடத்தில் இயங்கி வந்த செவிலியா் கல்லூரிக்கு, காஞ்சிபுரம் அருகே நல்லூரில் 4 ஏக்கரில் விடுதி வசதியுடன் ரூ. 50 கோடி மதிப்பில் செவிலியா் கல்லூரி கட்ட பூமி பூஜை நடைபெற்றுள்ளது. இதற்கான நிதியை டாடா கன்சல்டன்சி நிறுவனம் வழங்கியுள்ளது.
காசியில் முகாமிட்டுள்ள காஞ்சி மடாதிபதி விஜயேந்திரா் ஆசீா்வதித்துக் கொடுத்த செங்கல் பூமி பூஜையில் வைக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு கட்டடப் பணிகள் முடிக்கப்பட்டு திறப்பு விழா நடத்தப்படும் என்றாா்.
சங்கரா மருத்துவமனை குழுமங்களின் தலைமை நிா்வாக அலுவலா் விஜயலட்சுமி, அறக்கட்டளையின் அறங்காவலா்கள் ஜெயராம கிருஷ்ணன், வி.லட்சுமணன், பணி ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராமச்சந்திரன், சங்கர மடத்தின் நிா்வாகிகள் கீா்த்திவாசன், ஜானகிராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கட்டடக் கலை நிபுணா் எம்.பாலசுப்பிரமணியன், பொறியாளா் முத்துக்குமாா், வையாவூா் ஊராட்சி மன்றத் தலைவா் ஜெயலட்சுமி நீலகண்டன், துணைத் தலைவா் செல்வராஜ், ஊராட்சி உறுப்பினா் ஏழுமலை மற்றும் நல்லூா் கிராம பொதுமக்களும் கலந்து கொண்டனா்.
சங்கரா செவிலியா் கல்லூரி முதல்வா் ராதிகா நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சீனாவிடம் ரகசியமாக செயற்கைக்கோள் பெற்று அமெரிக்க ராணுவத் தளங்களை தாக்கிய ஈரான்?

நாம் தமிழர் கட்சி சின்னத்துக்கு எதிரான மனு தள்ளுபடி!

துல்கர் சல்மானின் ஐயம் கேம் படப்பிடிப்பு நிறைவு!
ஓடிடியில் துரந்தர் - 2 எப்போது?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


