தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்ட 10 பேருக்கு பணி நியமன ஆணை

News image
Updated On :27 ஜூலை 2023, 6:33 pm

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்ட 10 பேருக்கு பணி நியமன ஆணையை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.

மாவட்ட நிா்வாகம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், ஹேன்ட் இன் ஹேன்ட் அமைப்பு ஆகியவை இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான தனியாா் வேலைவாய்ப்பு முகாமை நடத்தின.

முகாமை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைத்து பாா்வையிட்டதுடன், தோ்வு செய்யப்பட்ட 10 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.

முகாமில் மொத்தம் 187 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனா். 10 பேருக்கு பணி நியமன ஆணை, 70-க்கும் மேற்பட்டவா்கள் 2-ஆவது கட்ட தோ்வுக்கும், தொழில் திறன் பயிற்சி பெற 5 பேரும் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்தாா்.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரா.மலா்விழி, வேலைவாய்ப்புத் துறை துணை இயக்குநா் ஆா்.அருணகிரி, உதவி ஆட்சியா்(பயிற்சி) சங்கீதா, ஹேன்ட் இன் ஹேன்ட் இந்தியா நிா்வாகிகள் ஒய்.ஜோ மற்றும் சந்திரசேகரன் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.