காஞ்சிபுரத்தில் குறைந்த விலைக்கு பட்டாசுகள்: வாங்க குவிந்த மக்கள்

காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள காவலர் பயிற்சிப்பள்ளி முன்பாக காவல்துறையினர் சனிக்கிழமை குறைந்த விலைக்கு பட்டாசுகள் விற்பதாக வந்த தகவலையடுத்து ஏராளமான பொதுமக்கள்
காஞ்சிபுரத்தில் குறைந்த விலைக்கு பட்டாசுகள்: வாங்க குவிந்த மக்கள்

காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள காவலர் பயிற்சிப்பள்ளி முன்பாக காவல்துறையினர் சனிக்கிழமை குறைந்த விலைக்கு பட்டாசுகள் விற்பதாக வந்த தகவலையடுத்து ஏராளமான பொதுமக்கள் பட்டாசுப்பெட்டிகளை வாங்க குவிந்தனர். 

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காவலர் பயிற்சிப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி முன்பாக காவல்துறையினர் அவர்களது குடும்பத்தினரின் குழந்தைகளுக்காக சிவகாசி பட்டாசு தொழிற்சாலையிலிருந்து ஏராளமான பட்டாசுகளை வாங்கி வந்திருந்து அதை குறைந்த விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதை வாங்க காவல்துறையினர் பலரும் அவர்களது குடும்பத்துடன் வந்திருந்து தேவையான பட்டாசுகளை குறைந்த விலைக்கு வாங்கிச் சென்றனர். இத்தகவல் பொதுமக்களிடம் வேகமாக பரவியதை தொடர்ந்து திரளான பொதுமக்கள் குறைந்த விலைக்கு பட்டாசுப்பெட்டிகள் கிடைப்பதால் அங்கு வந்து வாங்குவதற்காக குவியத் தொடங்கினார்கள்.

காவலர்களும் பொதுமக்களைப் போல குறைந்த விலைக்கு பட்டாசுப்பெட்டிகளை தங்கள் குழந்தைகளுடன் வந்திருந்து தேவையானவற்றை மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றதை பார்க்க முடிந்தது. இதுகுறித்து காவலர் ஒருவர் கூறுகையில், காவலர்களின் நலனுக்காக பட்டாசு உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து மொத்த விலைக்கு பட்டாசுப் பெட்டிகளை வாங்கி வந்தோம். அதை விருப்பப்பட்ட காவலர்களுக்கு அவர்களது பெயரைப் பதிவு செய்து கொண்டு ஒவ்வொருவருக்காக வழங்கிக் கொண்டு இருந்தோம். இதையறிந்து பொதுமக்களும் தங்களுக்கும் பட்டாசுகள் தருமாறு கேட்டு வந்தனர்.

பொதுமக்கள் வந்து கேட்கும் போது அதை கொடுக்காமல் இருக்க முடியவில்லை. மனித நேயத்தோடு பொதுமக்களுக்கும் விநியோகித்து வருகிறோம். பொதுமக்களும் குடும்பம், குடும்பமாக வந்து தேவையானவற்றை குறைந்த விலைக்கு மகிழ்ச்சியுடன் வாங்கிச் செல்வதைப் பார்க்கும் போது எங்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ரூ.250 முதல் ரூ.1000 வரை பல்வேறு வகைகளில் பட்டாசுப் பெட்டிகள் மிகக்குறைந்த விலைக்கு கொடுத்து வருகிறோம்.தீபாவளிக்காக வாங்கி வந்த பட்டாசுப்பெட்டிகளை சனிக்கிழமை மட்டும் தான் விற்க முடியும். 

தீபாவளியன்றோ அல்லது அதற்கு மறுநாட்களிலோ தேங்கி விட்டால் யாரும் வாங்கவும் மாட்டார்கள். இதனால் பொதுமக்கள் கேட்டாலும் பட்டாசுப் பெட்டிகளை குறைந்த விலைக்கு கொடுத்து வருகிறோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com