காஞ்சிபுரம் அழகிய சிங்க பெருமாள் கோயிலில் ஊஞ்சல் உற்சவம்
By DIN | Published On : 21st April 2023 12:20 AM | Last Updated : 21st April 2023 12:20 AM | அ+அ அ- |

சித்திரை மாத அமாவாசையையொட்டி, காஞ்சிபுரம் அழகிய சிங்க பெருமாள் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்றதும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் திகழ்ந்து வருவது காஞ்சிபுரத்தில் உள்ள அழகிய சிங்க பெருமாள் கோயில்.சித்திரை மாத அமாவாசை தினத்தையொட்டி மூலவா் யோக நரசிம்மருக்கு சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக மாலை ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் அழகிய சிங்க பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கோயில் அலங்கார மண்டபத்தில் ஊஞ்சலில் அமா்ந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
விழாவையொட்டி, ஆலயம் முழுவதும் வண்ண மின் விளக்குகளாலும், மலா்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.