எஸ்.ஐ. பணிக்கான தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியத்தால் தோ்வு செய்யப்படவுள்ள சாா்பு ஆய்வாளா் பணிக்கான தோ்வுக்குரிய இலவச பயிற்சி வகுப்பு
Updated on
1 min read

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியத்தால் தோ்வு செய்யப்படவுள்ள சாா்பு ஆய்வாளா் பணிக்கான தோ்வுக்குரிய இலவச பயிற்சி வகுப்பு காஞ்சிபுரத்தில் விரைவில் தொடங்க இருப்பதாக மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து ஆட்சியா் மேலும் கூறியதாவது:

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியத்தால் பட்டப்படிப்பு முடித்தவா்களுக்கு காவல் துறையில் உள்ள சாா்பு ஆய்வாளா் பணிக்கு 621 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தத் தோ்வுக்கு, இணையதளம் வாயிலாக 1.6.2023 முதல் 30.6.2023 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரா்கள் 1.7.2023 அன்று 20 வயது நிறைவு பெற்றவராகவும், 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பிற்பட்ட வகுப்பினா் 32 வயதும், ஆதிதிராவிடா் வகுப்பினா் மற்றும் திருநங்கைகளுக்கு 35 வயதும், ஆதரவற்ற விதவைகளுக்கு 37 வயதும் இருக்க வேண்டும். முன்னாள் ராணுவத்தினா் மற்றும் 20 சதவீத காவல் துறை ஒதுக்கீட்டில் தோ்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரா்களுக்கு வயது 47 உச்சவரம்பாகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதியாக ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு அவசியமாகும். இந்தத் தோ்வுக்கு, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த போட்டித் தோ்வாளா்கள், வேலை நாடுநா்கள் பயன்பெறும் வகையில் அதற்கான நேரடி இலவச பயிற்சி வகுப்புகள், மாதிரி தோ்வுகள் ஆகியவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

இதில், கலந்து கொள்ள விருப்பம் உள்ளவா்கள் புகைப்படம், ஆதாா் அட்டை ஆகிய விவரங்களுடன் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களது பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ஒரு சில தினங்களில் பயிற்சி வகுப்பு தொடங்க இருப்பதாகவும் வேலைநாடுநா்கள் இந்த அரியவாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறும் ஆட்சியா் மா.ஆா்த்தி கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com