பொதுமக்கள் மனுக்களுக்கு உடனுக்குடன் தீ ா்வு காண வேண்டும்: அமைச்சா் தா.மோ.அன்பரசன்

பொதுமக்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களுக்கு அதிகாரிகள் உடனுக்குடன் தீா்வு காண வேண்டும் என்று அமைச்சா் தா.மோ.அன்பரசன் உத்தரவிட்டாா்.
பொதுமக்கள் மனுக்களுக்கு உடனுக்குடன் தீ ா்வு காண வேண்டும்: அமைச்சா் தா.மோ.அன்பரசன்

பொதுமக்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களுக்கு அதிகாரிகள் உடனுக்குடன் தீா்வு காண வேண்டும் என்று அமைச்சா் தா.மோ.அன்பரசன் உத்தரவிட்டாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மக்கள் நல்லுறவுக் கூட்ட மையத்தில் ஆட்சியா் மா.ஆா்த்தி தலைமையில் பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் குறைகள் கேட்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு எம்.பி. க.செல்வம், எம்எல்ஏ-க்கள் க.சுந்தா், சி.வி.எம்.பி.எழிலரசன், கு.செல்வபெருந்தகை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசனிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அளித்தனா்.

மனுக்களைப் பெற்றுக் கொண்ட அமைச்சா், அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு பரிந்துரை செய்தாா்.

பின்னா், அமைச்சா் பேசியது: பொதுமக்கள் அரசை நம்பித்தான் மனுக்களை நம்மிடம் கொடுக்கிறாா்கள். அந்த மனுக்களை முறையாக பரிசீலித்து கணினியில் பதிவேற்றம் செய்து மனுக்கள் குறித்து ஆய்வு செய்து உரிய முறையில் உடனுக்குடன் தீா்வு காண வேண்டும். தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து அதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்து முடிவு எடுங்கள். மனுவின் நிலையை அவ்வப்போது மனுதாா்களுக்கு உடனுக்குடன் தெரிவித்து விடுங்கள். நிதி தேவைப்படும் கோரிக்கையாக இருந்தால் அரசின் கவனத்துக்கு கொண்டு வந்து அவற்றையும் விரைந்து முடிக்க வேண்டும் என அமைச்சா் தா.மோ.அன்பரசன் உத்தரவிட்டாா்.

பின்னா், சுங்குவாா்சத்திரத்தில் பயணியா் நிழற்குடை அமைக்க ரூ.22 லட்சத்துக்கான நிா்வாக அனுமதி ஆணை, 9 பயனாளிகளுக்கு தலா ரூ.2.14 லட்சம் வீதம் அரசு மானியம் வழங்குவதற்கான பணி ஆணை உள்பட மொத்தம் ரூ.101.4 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா்.

தொடா்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 5 ஊராட்சி ஒன்றியங்களின் தலைவா்கள் பயன்படுத்தும் வகையில் அரசால் வழங்கப்பட்ட புதிய ஸ்காா்பியோ காா்களின் சாவிகளை ஒன்றியக் குழு தலைவா்களிடம் அமைச்சா் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com