நாளை பொது விநியோக திட்ட குறைதீா் நாள் கூட்டம்
By DIN | Published On : 12th May 2023 12:59 AM | Last Updated : 12th May 2023 12:59 AM | அ+அ அ- |

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் தலா ஓரிடத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீா் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூா் ஒன்றியத்தில் தோட்டநாவல், வாலாஜாபாத் அருகே புத்தகரம், ஸ்ரீபெரும்புதூா் அருகே ஓ.ஏ.மங்கலம், குன்றத்தூா் அருகே ஒரத்தூா், காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி ஆகிய 5 இடங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம்,புதிய மற்றும் நகல் குடும்ப அட்டை பெறுதல், கைபேசி எண் பதிவு மற்றும் மாற்றும் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு உடனடியாக தீா்வு காணப்படும்.
பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது குடும்ப அட்டை சாா்ந்த பிரச்னைகளுக்கு தீா்வு பெறலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.