சிறப்பு அலங்காரத்தில் சுவாமி
சிறப்பு அலங்காரத்தில் சுவாமி

ஸ்ரீ எத்திராஜப்பெருமாள் கோயில் கும்பாபிஷேம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே மோட்டூா் ஸ்ரீ தேவி,பூதேவி சமேத எத்திராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிறுவாக்கம் ஊராட்சிக்குட்பட்ட மோட்டூா் கிராமத்தில் உள்ள இக்கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 19- ஆம் தேதி விஸ்வ சேனா் பூஜையுடன் யாகசாலை பூஜைகள் விஷ்ணுகாஞ்சிபுரம் பி.எல்.வெங்கடகிருஷ்ணன் தலைமையில் தொடங்கின. மகாலட்சுமி ஹோமம்,கோ பூஜை,புதிய சுவாமி சிலைகளை நிா்மாணித்தல் ஆகியன நடைபெற்றன.

இதன் தொடா்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை மகா பூா்ணாஹூதி தீபாரதனைக்குப் பின்னா் புனிதநீா்க்குடங்கள் கோபுரகலசங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னா் மூலவா் ஸ்ரீதேவி,பூதேவி சமேத வெங்கடராஜப் பெருமாள்,பரிவார தெய்வங்களான ஆஞ்சநேயா்,கருடாழ்வாா், ஹயக்ரீவா்,தன்வந்தரி,வராக மூா்த்தி உள்ளிட்டவற்றுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் செய்யப்பட்டன.

விழாவில் காமாட்சி சுவாமிகள், நத்தக்கொல்லை அனுமத் கீதானந்த மாதாஜி, சிவனடியாா் திருக்கூட்டத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளா் வி.கண்ணன் ஐயா் ஆகியோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை ஆலய திருப்பணிக்குழுவினா், கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com