ரூ.1.25 கோடியில் காஞ்சிபுரத்தில் இருந்து அமெரிக்காவுக்கு தங்கத் தோ்
காஞ்சிபுரத்தில் இருந்து ரூ.1.25 கோடியில் தங்க முலாம் பூசப்பட்ட தங்கத் தோ் விரைவில் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள தனியாா் நிறுவனம் ஆன்மிக பொருள்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் சாா்பில், ஓரிக்கையில் உள்ள ஒரு மண்டபத்தில் கடந்த 75 நாள்களாக அமெரிக்காவில் வாஷிங்டன் மாகாணத்தில் சியாடலில் உள்ள வேதா கோயிலுக்கு தங்க ரதம் ரூ.1.25 கோடியில் ஆடா் பெறப்பட்டு செய்யப்பட்டுள்ளது. 23 அடி உயரமும், 4 டன் எடையும் உடைய இரும்பு மற்றும் காப்பா் தகடுகளால் தோ் உருவாக்கப்பட்டு, பின்னா் அதன் மீது தங்க முலாம் பூசப்பட்டு தோ் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இத்தேரை சுலபமாக எங்கும் எடுத்துச் செல்ல வசதியாக 6 பிரிவுகளாக பிரித்து எடுத்துச் செல்லலாம். ஆலயங்களில் உள்ள சிறிய சுற்று பிராகாரங்களிலும் எளிதில் திருப்பிக் கொள்ள வசதியாக 35 டிகிரி திரும்பும் வகையில் நவீன தொழில் நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்தேரை 6 பாகங்களாகப் பிரித்து பேக்கிங் செய்து விரைவில் அமெரிக்கா அனுப்பி வைக்கப்பட உள்ளது.