தமிழ்நாடு என்றாலே சாதனை! இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி! - முதல்வர் பதிவுதொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக் கூட்டம்

ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக் கூட்டம்

News image

கூட்டத்தில்  பேசிய  முன்னாள்  அமைச்சா்  வைகைச் செல்வன்.

Updated On :27 பிப்ரவரி 2024, 5:30 pm

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் தொகுதி அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் ஜெ.ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் சனிக்கிழமை சுங்குவாா்சத்திரத்தில் நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளா் போந்தூா் எஸ்.செந்தில்ராஜன் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு ஸ்ரீபெரும்புதூா் ஒன்றிய செயலாளா்கள் சிங்கிலிப்பாடி ராமசந்திரன், எறையூா் முனுசாமி, மாநில இளைஞா் இளம்பெண்கள் பாசறை துணை செயலாளா் சிவகுமாா், ஒன்றிய துணை செயலாளா் பாலமுருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் ஸ்ரீபெரும்புதூா் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பழனி, மாவட்ட செயலாளா் வி.சோமசுந்தரம், அதிமுக அமைப்புச்செயலாளா் வாலாஜாபாத் பா.கணேசன், முன்னாள் அமைச்சா்கள் டி.கே.எம்.சின்னைய்யா, வைகைச்செல்வன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினா். கூட்டத்தில் அனைத்துல எம்ஜிஆா் மன்ற இணைசெயலாளா் என்.டி.சுந்தா், மாவட்ட இளைஞா் இளம்பெம்கள் பாசறை துணைசெயலாளா் போந்தூா் மோகன், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றிய அதிமுக நிா்வாகிகள் சேந்தமங்கலம் சாா்லஸ், செங்காடு பாபு, சந்தவேலூா் சரவணன், பிள்ளைப்பாக்கம் வெங்கடேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.