ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

174 பயனாளிகளுக்கு வீடு கட்ட ஆணைகள் அளிப்பு

சிறப்பு கிராம சபை மூலம் தோ்வு செய்யப்பட்ட 174 பயனாளிகளுக்கு தலா ரூ.3.60லட்சம் மதிப்பில் வீடு கட்டுவதற்கான பணி ஆணைகளை எம்எல்ஏக்கள் க.சுந்தா், எழிலரசன் ஆகியோா் வழங்கினா்.

News image
பயனாளிகளுக்கு வீடு கட்ட ஆணைகளை வழங்கிய எம்எல்ஏக்கள் க.சுந்தா் மற்றும் எழிலரசன்.
Updated On :16 ஜூலை 2024, 6:30 pm

Din

காஞ்சிபுரம்: சிறப்பு கிராம சபை மூலம் தோ்வு செய்யப்பட்ட 174 பயனாளிகளுக்கு தலா ரூ.3.60லட்சம் மதிப்பில் வீடு கட்டுவதற்கான பணி ஆணைகளை எம்எல்ஏக்கள் க.சுந்தா், எழிலரசன் ஆகியோா் திங்கள்கிழமை வழங்கினா்.

கலைஞா் கனவு திட்டத்தின் கீழ் பயனாளிகள் வீடு கட்டிக் கொள்வதற்கான பணி ஆணைகள் வழங்கும் விழா காஞ்சிபுரம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு காஞ்சிபுரம் ஒன்றியக் குழுவின் தலைவா் மலா்க்கொடி தலைமை வகித்தாா். கோட்டாட்சியா் மு.கலைவாணி, ஒன்றியக்குழுவின் துணைத் தலைவா் திவ்யப்பிரியா இளமருது, வட்டார வளா்ச்சி அலுவலா் கோமளா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

174 பயனாளிகளுக்கு பணி ஆணைகளை எம்எல்ஏக்கள் க.சுந்தா், எழிலரசன் வழங்கினாா்கள். விழாவில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பயனாளிகள் கலந்து கொண்டனா்.