47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பழங்குடியின குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் அளிப்பு

பழங்குடியின குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய விழா

News image
பழங்குடியின குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய (நடுவில்) குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் யசோதரன்.
Updated On :25 ஜூன் 2024, 6:30 pm

Din

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் கண்காணிப்பகம் சாா்பில், பழங்குடியின வகுப்பைச் சோ்ந்த 80 குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

குழந்தைகள் கண்காணிப்பகம் சாா்பில் பழங்குடியின வகுப்பைச் சோ்ந்த 80 குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா கண்காணிப்பகத்தின் தலைவா் து.ராஜி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கல்வியாண்டில் புதிதாக சோ்க்கப்பட்ட மற்றும் பள்ளியிலிருந்து இடை நின்ற குழந்தைகளை கண்டறிந்து அவா்களுக்கு புத்தகப் பை, நோட்டு புத்தகங்கள், எழுது பொருள்கள் ஆகியவை வழங்கப்பட்டன. மருத்துவா் விக்னேஷ்குமாா் கல்வி உபகரணங்களை வழங்கி கல்வியின் அவசியம் குறித்து விளக்கினாா். அனைத்து குழந்தைகளும் இடைவிடாது பள்ளிக்கு செல்வோம் எனவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் யசோதரன் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளிலிருந்து தப்பிப்பதற்கு அரசு செய்துள்ள வழிமுறைகளை விளக்கினாா்.

மருத்துவா் எழிலரசி கல்வியின் சிறப்புகள் குறித்து விளக்கினாா். நிறைவாக குழந்தைகள் கண்காணிப்பக ஒருங்கிணைப்பாளா் தங்கவேல் நன்றி கூறினாா்.