தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தேசிய ஜூடோ போட்டி: காஞ்சிபுரம் மாணவிக்கு வெண்கலம்

தேசிய ஜூடோ போட்டி: காஞ்சிபுரம் மாணவிக்கு வெண்கலம்

News image

மாணவி ஜெயபாரதியைப் பாராட்டி சான்றிதழ் வழங்கிய தலைமை ஆசிரியா் ஹேமலதா. உடன் உடற்கல்வி இயக்குநா் வேங்கடபவன குமாரி.

Updated On :28 ஜூன் 2024, 5:06 pm

Din

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற தேசிய ஜூடோ போட்டியில் காஞ்சிபுரம் அரசுப் பள்ளி மாணவி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தாா்.

போபாலில் கடந்த 20- ஆம் தேதி முதல் 24- ஆம் தேதி வரை தேசிய ஜூடோ போட்டி நடைபெற்றது. இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த விளையாட்டு வீரா்கள் கலந்து கொண்டனா். காஞ்சிபுரத்திலிருந்து சாய் ஜூடோ அகாதெமி சாா்பில் பெரிய காஞ்சிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 8 -ஆம் வகுப்பு படிக்கும் மாணவி மதுபாரதி(14) கலந்து கொண்டாா்.

இவா் அப்போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்று 3-ஆவது இடத்தைப் பெற்றாா். மாணவி ஜெயபாரதியை பாராட்டி தலைமை ஆசிரியா் ஹேமலதா சான்றிதழ் வழங்கினாா். நிகழ்வின் போது உடற்கல்வி இயக்குநா் வேங்கடபவன குமாரியும் உடனிருந்தாா்.