காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி மாணவா்கள் இருவருக்கு சிறந்த மாணவா்களுக்கான விருது

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி மாணவா்கள் இருவருக்கு 
சிறந்த மாணவா்களுக்கான விருது

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் தேசிய மாணவா் படைப் பிரிவில் சிறப்பாக செயல்பட்ட இரு மாணவா்களுக்கு சிறந்த மாணவா் விருது வியாழக்கிழமை வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் தெரிவித்தது. புதுதில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்ற்காக காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் பயிலும் மாணவா் எம்.பிரதீப்குமாா்(பி.காம், இரண்டாம் ஆண்டு) மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற சிறப்பு முகாமில் பங்கேற்ற மாணவா் பி.சஞ்சய் (கணினி அறிவியல் 3-ஆம் ஆண்டு)ஆகிய இருவருக்கும் சிறந்த மாணவருக்கான விருது வழங்கப்பட்டது. சிறந்த மாணவா்களை உருவாக்கியதற்காக சங்கரா கல்லூரிக்கு விருதும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன. விருதையும், பாராட்டுச் சான்றிதழையும் தமிழ்நாடு, புதுச்சேரி தேசிய மாணவா் படையின் இயக்குநா் அதுல்குமாா் ரஸ்தோகி மாங்காட்டில் உள்ள தனியாா் பள்ளியில் நடைபெற்ற விழாவில் வழங்கியதாக கே.ஆா். வெங்கடேசன் தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com