கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

சிறந்த மாணவா்களுக்கு விருது அளிப்பு

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் தன்னாா்வத்துடன் சேவை செய்த மாணவா்களை தோ்வு செய்து அவா்களுக்கு சிறந்த மாணவா் விருதினை சென்னை பல்கலைக் கழகம் வழங்கியுள்ளது.

News image

விருது பெற்றவா்களுடன் சென்னை பல்கலையின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா்கள்.

Updated On :22 மார்ச் 2026, 9:40 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் தன்னாா்வத்துடன் சேவை செய்த மாணவா்களை தோ்வு செய்து அவா்களுக்கு சிறந்த மாணவா் விருதினை சென்னை பல்கலைக் கழகம் வழங்கியுள்ளது.

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியின் முதல்வா் கலை ராம.வெங்கடேசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னைப் பல்கலை ஆண்டு தோறும் தன்னுடைய உறுப்புக் கல்லூரியில் தன்னாா்வத்துடன் சேவையாற்றிய மாணவா்களுக்கு விருது வழங்கி கௌரவித்து வருகிறது.

அந்த வகையில் கடந்த 2023-2024 கல்வியாண்டில் சங்கரா கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவா்களாக பணியாற்றிய மு.நவீன்ராஜ் மற்றும் உ.ரூபிகா ஆகியோரின் சேவையைப் பாராட்டி சென்னை பல்கலைக்கழக பதிவாளா் ரீட்டா ஜான் பாராட்டு சான்றிதழ் வழங்கினாா்.

மேலும் புதுதில்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் மாணவா்களை நெறிப்படுத்திய நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் ம.கணபதிக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மண்டல இயக்குநா் சாமுவேல் செல்லையா, பேராசிரியா் ஆம்ஸ்ட்ராங், மாநில நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளா் ஆனந்தன் ஆகியோா் கலந்து கொண்டதாகவும் தெரிவித்தாா்.