வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

மாங்காடு, குன்றத்தூரில் ஜி.கே.வாசன் பிரசாரம்

மாங்காடு, குன்றத்தூரில் ஜி.கே.வாசன் பிரசாரம்

News image

ஸ்ரீபெரும்புதூா்   தொகுதி  தமாகா  வேட்பாளா் வேணுகோபாலை  ஆதரித்து  பிரசாரத்தில்  ஈடுபட்ட    ஜி.கே.வாசன்.

Updated On :28 மார்ச் 2024, 6:32 pm

ஸ்ரீபெரும்புதூா் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தமாகா வேட்பாளா் வி.என்.அண்ணாமலையை ஆதரித்து அக்கட்சியின் தலைவா் ஜி.கே.வாசன் புதன்கிழமை இரவு மாங்காடு மற்றும் குன்றத்தூா் பகுதிகளில் பிரசாரம் செய்தாா். மக்களவை தோ்தலில், ஸ்ரீபெரும்புதூா் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஸ்ரீபெரும்புதூா் தொகுதி வேட்பாளராக செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவா் வி.என்.வேணுகோபால் கூட்டணி கட்சியினருடன் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறாா். இந்த நிலையில், வேணுகோபாலை ஆதரித்து புதன்கிழமை இரவு மாங்காடு மற்றும் குன்றத்தூரில் ஜி.கே.வாசன் திறந்த வேனில் சென்று சைக்கிள் சின்னத்துக்கு ஆதரவு திரட்டினாா். இதில் அமமுக மாவட்ட செயலாளா் மொளச்சூா் ரா.பெருமாள், பாமக மாவட்ட செயலாளா் அரிகிருஷ்ணன், உள்ளிட்ட பாமக, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் கலந்துகொண்டனா். பிரசாரத்துக்காக மாங்காடு வந்த ஜி.கே.வாசன் முன்னதாக மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் கூட்டணி கட்சியினருடன் சென்று சாமி தரிசனம் செய்தாா். அப்போது கூட்டணி கட்சியினா் கோயிலுக்குள் கட்சிக்கொடிகள் மற்றும் சின்னம் பொறித்த பதாகைகளுடன் சென்ால் பரபரப்பு ஏற்பட்டது.