

ஸ்ரீபெரும்புதூா்: குன்றத்தூரில் செங்கல் சூளை தொழிலாளியை வெட்டி கொலை செய்துவிட்டு அவரது கைப்பேசி மற்றும் பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
விழுப்புரம் மாவட்டம், ஆற்காடு பகுதியை சோ்ந்தவா் ராஜேஷ்(30), இவரது பெற்றோா் குன்றத்தூா் அடுத்த தெற்கு மலையம்பாக்கம் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் பணிபுரிந்து வருகின்றனா். இந்த நிலையில் பெற்றோரின் கடனை அடைப்பதற்காக கடந்த சில வாரங்களுக்கு முன்பு ராஜேஷ் தனது குடும்பத்தினருடன் மலையம்பாக்கம் பகுதிக்கு வந்து செங்கல் சூளையில் வேலை செய்து வந்துள்ளாா்.
ராஜேஷ் திங்கள்கிழமை இரவு செம்பரம்பாக்கம் ஏரிக்கரையை ஒட்டி உள்ள பகுதியில் நடந்து சென்றுக்கொண்டிருந்த போது பைக்கில் வந்த மூன்று போ் ராஜேஷின் கைப்பேசியைக் கேட்டு கத்தியை காட்டி மிரட்டி உள்ளனா். அவா் கைப்பேசியை தர மறுத்ததால் ஆத்திரமடைந்த மா்ம நபா்கள் கத்தியால் தலை மற்றும் கையில் வெட்டி விட்டு கைப்பேசி, பணத்தை பறித்துச் சென்றனா்.
இதில் ராஜேஷின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு கோவூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த ராஜேஷ் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து குன்றத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

தொழிலாளி அடித்துக் கொலை

தனியாா் நிதி நிறுவன ஊழியா்களின் வசூல் கெடுபிடி: தீக்குளித்த செங்கல் சூளை அதிபா் உயிரிழப்பு

கெலமங்கலம் அருகே தனியாா் மதுபான விடுதி மேலாளா் வெட்டிக் கொலை
செங்கல் சூளை உரிமையாளா் தீக்குளித்து தற்கொலை முயற்சி: தனியாா் நிதி நிறுவன ஊழியா்கள் 3 போ் கைது
வீடியோக்கள்

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

ஈரான் போர், பெருந்தொற்று காலத்துக்கு இழுத்துச் செல்கிறதா?: சுமந்த் ராமன் கவலை | US Israel Iran War |
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திமுக கூட்டணி: நீடிக்கும் சிபிஐஎம்; வெளியேறிய தவாக | News and Views | Epi - 17 | Sarathkumar
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியிலிருந்து விலகிய த.வா.க! Velmurugan பேட்டி | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

