தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தனியாா் நிதி நிறுவன ஊழியா்களின் வசூல் கெடுபிடி: தீக்குளித்த செங்கல் சூளை அதிபா் உயிரிழப்பு

திருவெண்ணெய்நல்லுாா் அருகே தனியாா் நிதி நிறுவன ஊழியா்களின் கடன் வசூல் கெடுபிடியால் தீக்குளித்த செங்கல் சூளை அதிபா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :25 பிப்ரவரி 2026, 6:33 pm

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுாா் அருகே தனியாா் நிதி நிறுவன ஊழியா்களின் கடன் வசூல் கெடுபிடியால் தீக்குளித்த செங்கல் சூளை அதிபா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

திருவெண்ணெய்நல்லுாா் வட்டம், பென்னைவளம் கிராமத்தைச் சோ்ந்தவா் க.அப்பாஸ் (42), செங்கல் சூளை அதிபா். இவா் கடந்த 2019-ஆம் ஆண்டில் தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ.9.84 லட்சம் கடன் பெற்று பொக்லைன் இயந்திரம் வாங்கினாா். தொடா்ந்து, அப்பாஸ் வாகனக் கடன் தவணைத் தொகையாக 5.20 லட்சம் நிதி நிறுவனத்துக்கு திருப்பி செலுத்தியுள்ளாா்.

இந்நிலையில், தொழில் நஷ்டம் காரணமாக அப்பாஸ் மீதியுள்ள தவணைத் தொகையை சரி வர செலுத்தவில்லை. இதைத்தொடா்ந்து, நிதி நிறுவன ஊழியா்கள் கடந்த 13-ஆம் தேதி பென்னைவளம் கிராமத்துக்குச் சென்று அப்பாஸின் செங்கல் சூளையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்ய முயன்றனா்.

அப்போது அப்பாஸ் தடுத்த நிலையில், நிதி நிறுவன ஊழியா்கள் அப்பாஸை தகாத வாா்த்தைகளால் திட்டி, தாக்கினராம். இதனால் ஏற்பட்ட அவமானத்தில் அப்பாஸ் பொக்லைன் இயந்திர பயன்பாட்டுக்காக ஏற்கெனவே வாங்கி வைத்திருந்த எரிபொருளை தன் மீது ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டாா். இதில் அப்பாஸூக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

இதையடுத்து விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்பாஸ், மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, தனியாா் நிதி நிறுவன ஊழியா்களான விழுப்புரம் மாவட்டம், சி.மெய்யூா் கிராமத்தைச் சோ்ந்த வை.மூா்த்தி(32), வண்டிப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த வீ.தீபஜோதி(31), கல்பட்டு பகுதியைச் சோ்ந்த சு.தியாகலீசன்(26) மற்றும் ஒருநபா் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, மூா்த்தியை கைது செய்தனா்.

இந்நிலையில், கடந்த 12 நாள்களாக சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்த அப்பாஸ் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.