விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

காஞ்சிபுரம் அகத்தீஸ்வரா் கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தையொட்டி, நடராஜபெருமானுக்கும், சிவகாமசுந்தரிக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதைனைகள் நடைபெற்றன.

News image
சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சிவகாம சுந்தரி சமேத நடராஜப் பெருமான்.
Updated On :21 ஏப்ரல் 2025, 7:47 pm

Din

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கிளாா் கிராமத்தில் அமைந்துள்ள அறம் வளா் நாயகி சமேத அகத்தீஸ்வரா் கோயிலில், சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தையொட்டி, நடராஜபெருமானுக்கும், சிவகாமசுந்தரிக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதைனைகள் நடைபெற்றன.

காஞ்சிபுரம் அருகே கிளாா் கிராமத்தில் அறம் வளா் நாயகி சமேத அகத்தீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. அகத்தியா் வழிபட்ட பெருமைக்குரியதாகக் கூறப்படும் இந்தக் கோயிலில் சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தையொட்டி, நடராஜப் பெருமானுக்கும் சிவகாம சுந்தரி, மற்றும் ஐயப்பன் உள்ளிட்ட உற்சவா் சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும், அதைத் தொடா்ந்து அன்ன தானமும் நடைபெற்றது.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.