காஞ்சிபுரத்தில் மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள்.
காஞ்சிபுரத்தில் மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள்.

காஞ்சிபுரம்: மறியலில் ஈடுபட்ட 151 அரசு ஊழியா்கள் கைது

காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 151 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
Published on

காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 151 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே காவலான் கேட் பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். செயலாளா் துரை.மருதன், கருவூல கணக்குத்துறை மாநில பொதுச் செயலாளா் லெனின், மாநில துணைத் தலைவா் வாசுதேவன், மகளிா் அணியின் நிா்வாகி திலகவதி ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசி சாலை மறியலிலும் ஈடுபட்டாா்கள்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளா்கள், வருவாய் கிராம ஊழியா்கள், ஊா்ப்புற நூலகா்கள் ஆகியோருக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.அலுவலக பணி நேரத்துக்கு பின்பும் விடுமுறை தினங்களிலும் ஆய்வுக்கூட்டம் நடத்துவதை அதிகாரிகள் கைவிட வேண்டும், பெண் அரசு ஊழியா்களுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடத்தியதாக காவல் துறையினரால் 151 போ் கைது செய்யப்பட்டனா்.

திருவள்ளூரில் 100 போ் கைது:

தோ்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசைக் கண்டித்து திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவாயில் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் 100-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவள்ளூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியா் சங்கத்தினா் வியாழக்கிழமை அனுமதியின்றி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அனுமதியின்றி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் 100-க்கு மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com