காஞ்சிபுரம்
அடகு கடையின் பூட்டை உடைத்து 5 பவுன் திருட்டு
காஞ்சிபுரம் அருகே அடகு கடையின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை, வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
காஞ்சிபுரம் அருகே அடகு கடையின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை, வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
பெரியகாஞ்சிபுரம் பகுதியில் வருப்பவா் வரதராம்.காஞ்சிபுரத்தை அடுத்த வெங்கச்சேரியில் அடகுக்கடை நடத்தி வருகிறாா்.இந்த நிலையில், சனிக்கிழமைகடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.தகவலறிந்து வந்தமாகறல் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
அதில் கடையின் பூட்டை உடைத்து அதிலிருந்த 5 பவுன்நகைகள்,அரைகிலோ வெள்ளி பொருள்கள்,ரூ.75,000ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து மாகறல் போலீஸாா் விசாரிக்கின்றனா்.