

காஞ்சிபுரத்தில் பணம் கொடுக்கல், வாங்கலில் ஏற்பட்ட தகராற்றைச் சமாதானம் செய்ய சென்ற நபர் தனக்கும் பாதித்தொகை தர வேண்டும் எனக்கேட்டதில் ஏற்பட்ட தகராற்றில் இடைத்தரகரான லிங்கேஷ் வியாழக்கிழமை கொலை செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் பரந்தூரை அடுத்த வதியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லிங்கேஷ்(41) இடைத்தரகராக இருந்து வரும் தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரிடம் ரூ. 34 ஆயிரம் கடனாகப் பெற்றுள்ளார். சுரேஷ் கடனை திருப்பிதர கேட்டதற்கு வீட்டிலுள்ள நகையை விற்று கடனை தந்து விடுவதாக லிங்கேஷ் கூறியுள்ளார்.
நகைக்கடைக்குச் சென்று விட்டுத் திரும்பும்போது சுரேஷின் நண்பர்களான ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவரும், சரித்திரப்பதிவேடு குற்றவாளியுமான சரத்,திருமால்பூரை சேர்ந்த தசா ஆகிய 3 பேரும் சேர்ந்து பொன்னேரிக்கரை மேம்பாலத்தில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.
அப்போது ஏற்பட்ட தகராறில் சரத் தனக்கும் பாதிப்பணம் தர வேண்டும் எனக் கூறியதில் ஏற்பட்ட தகராறில் சரத் லிங்கேஷை கத்தியால் கழுத்தில் குத்தி விட்டு தலைமறைவாகிவிட்டார். லிங்கேஷ் அருகிலிருந்தவர்கள் உதவியுடன் மீட்கப்பட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்குச் சிகிச்சை பலனளிக்காது உயிரிழந்தார்.
இக்கொலைச் சம்பவம் தொடர்பாக லிங்கேசுக்கு ரூ. 34 ஆயிரம் கடனாகக் கொடுத்த தண்டத்தைச் சேர்ந்த சுரேஷை காஞ்சிபுரம் தாலுகா போலீஸார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்தில் தொடர்புடைய சரத், தசா ஆகியோரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.