

மலேசியாவில் நடைபெறும் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தை பிரதிபலிக்கும் பொருள்களை கொண்டு வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் “ஜன நாயகன்”. இந்தப் படம் வரும் ஜன.9 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள பல்வேறு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தில், பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோல் மற்றும் நடிகர்கள் பூஜா ஹெக்டே, பிரியாமணி மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவின் கோலாலம்பூரிலுள்ள புக்கிட் ஜலீல் திடலில் வருகின்ற டிச. 27 ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
வழக்கமாக, நடிகர் விஜய்யின் இசை வெளியீட்டு விழாவில் அரசியல் தொடர்பான மறைமுக பேச்சுகள் இடம்பெறும். அதைக்கேட்பதற்காக அவரின் ரசிகர்கள் ஆவலுடன் இருப்பார்கள்.
இதனிடையே, ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் அரசியல் ரீதியிலான பேச்சுக்கும், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி, அரசியல் சார்ந்த பதாகைகள் உள்ளிட்டவையும் நிகழ்ச்சி திடலுக்குள் கொண்டுவருவதற்கும் மலேசியா காவல் துறை தடை விதித்துள்ளதாகத் தகவல் தெரியவந்தது.
இந்த நிலையில், ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தை பிரதிபலிக்கும் பொருள்களை கொண்டு வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தவெக கொடியில் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்கள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.