

நடிகர் விஜய்யின் “ஜன நாயகன்” திரைப்படத்தின் ஹிந்தி மொழி தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகி வரும் புதிய திரைப்படம் “ஜன நாயகன்”. இந்தப் படம் வரும் ஜன.9 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள பல்வேறு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தில், பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோல் மற்றும் நடிகர்கள் பூஜா ஹெக்டே, பிரியாமணி மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், இந்தியாவின் வடக்கு மாநிலங்களில் ஹிந்தி மொழியில் மொழிப்பெயர்க்கப்பட்டு வெளியாகும் ஜன நாயகன் திரைப்படத்துக்கு, “ஜன் நேத்தா” எனப் பெயரிடப்பட்டுள்ளதாக, படக்குழு இன்று (டிச. 24) அறிவித்துள்ளது.
முன்னதாக, நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகும் கடைசி திரைப்படமாக அறியப்படும் ஜன நாயகன் படத்தின் இசைவெளியீட்டு விழா வரும் டிச. 27 ஆம் தேதி மலேசியா நாட்டில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பான் இந்திய மொழிகளில் வெளியாகும் துரந்தர் - 2
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.