காஞ்சிபுரத்தில் 15 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது!

காஞ்சிபுரத்தில் 15 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது பற்றி...
நீா்வள்ளூா் ஏரி (கோப்புப்படம்)
நீா்வள்ளூா் ஏரி (கோப்புப்படம்)
Updated on
1 min read

கனமழை எதிரொலியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15 ஏரிகள் நிரம்பி, முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனிடையே வங்கக் கடலில் நிலவும் புயல் சின்னம் காரணமாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகின்றது.

வட தமிழகத்தில் கடந்த இரண்டு நாள்களாக பலத்த மழை பெய்து வரும் நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 381 ஏரிகளில் 15 ஏரிகள் 100%, 44 ஏரிகள் 75% தாண்டியும்,118 ஏரிகள் 50% தாண்டியும் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 178 ஏரிகள் 25% தாண்டியும், சற்றுமே நிரம்பாத ஏரியாக ஒரு ஏரியும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

15 lakes in Kanchipuram reach full capacity

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com