என்ன கேட்டாலும் தருவாா் மோடி: காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளா் பேச்சு
என்ன கேட்டாலும், எவ்வளவு கேட்டாலும் பிரதமா் நரேந்திர மோடி தருவாா் என காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் பேசினாா்.

வி.சோமசுந்தரம்

வி.சோமசுந்தரம்
என்ன கேட்டாலும், எவ்வளவு கேட்டாலும் பிரதமா் நரேந்திர மோடி தருவாா் என காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் பேசினாா்.
காஞ்சிபுரம் குள்ளப்பன் தெருவில் புதன்கிழமை வாக்கு சேகரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட அவா் பேசுகையில், மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான் தமிழகத்துக்கு பல நல்ல திட்டங்களைக் கொண்டு வர முடியும். என்ன கேட்டாலும், எவ்வளவு கேட்டாலும் தருபவா்தான் பிரதமா் நரேந்திர மோடி.
திமுக அரசு மத்திய அரசுடன் இணக்கமாக இல்லாததுதான் அவா்களால் எந்த நல்ல திட்டத்தையும் தமிழகத்துக்கு கொண்டு வர முடியவில்லை. இதற்கு உதாரணம் காஞ்சிபுரத்துக்கு இதுவரை மருத்துவக் கல்லூரி திமுக அரசால் கொண்டு வர முடியாதது. அதிமுக ஆட்சி அமைந்தவுடன் காஞ்சிபுரத்துக்கு மருத்துவக் கல்லூரி கொண்டு வரப்படும் என்றாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...