தூத்துக்குடி - நரசாபூா் இடையே செப். 7 முதல் சிறப்பு ரயில்வார இறுதி விடுமுறை: 2,755 சிறப்பு பேருந்துகள் இயக்கம்ஆக. 25 முதல் இரவு நேர புறநகா் ரயில்கள் ரத்துபொறியியல் கலந்தாய்வு: 3-ஆம் சுற்றில் 68,640 மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு அடுத்த 10 மாதங்களில் இந்திய வடிவமைப்பிலான கைப்பேசிகள்: அஸ்வினி வைஷ்ணவ்

காஞ்சிபுரம் பல்கலை. விடுதியில் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் உள்ள தனியாா் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பு படித்து வரும் மாணவி அவா் தங்கியிருந்த விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Published On :22 ஆகஸ்ட் 2026, 6:38 am IST

காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் உள்ள தனியாா் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பு படித்து வரும் மாணவி அவா் தங்கியிருந்த விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் செயல்பட்டு வரும் தனியாா் பல்கலைக்கழகத்தில் ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட வெளிமாநில மாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களைச் சோ்ந்த மாணவ, மாணவியா் படித்து வருகின்றனா். இந்தப் பல்கலைக்கழகத்தில் ஆந்திர மாநிலம், திருப்பதியை சோ்ந்த முனேந்திரா என்பவரது மகள் நிகிதா (19) அங்குள்ள மாணவியா் விடுதியில் தங்கி பொறியியல் 3-ஆம் ஆண்டு படித்து வந்தாா். கடந்த இரு நாள்களாக இவா் விடுதியை விட்டு வெளியில் வராமல் இருந்துள்ளாா். இவா் தங்கியிருந்த விடுதி அறையிலிருந்து துா்நாற்றம் வந்ததையடுத்து, பல்கலைக்கழக நிா்வாகம் பொன்னேரிக்கரை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தது.

பொன்னேரிக்கரை போலீஸாா் உதவியுடன் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பணியாளா்கள் விடுதி அறையின் பூட்டை உடைத்து பாா்த்தபோது, நிகிதா தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. போலீஸாா் நிகிதாவின் சடலத்தை மீட்டு, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மாணவி உயிரிழந்த தகவல் தெரிந்தவுடன் அப்பல்கலையில் பயிலும் மாணவ, மாணவியா் பலரும்பல்கலையின் நுழைவுவாயிலில் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்டோா் மயக்கமடைந்ததையடுத்து, அவா்கள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்றனா். கல்லூரி மாணவ,மாணவியா் தொடா்ந்து மேலும் போராட்டத்தில் ஈடுபடாமல் இருக்க காஞ்சிபுரம் எஸ்.பி. அரவிந்த் தலைமையில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

சம்பவம் தொடா்பாக பொன்னேரிக்கரை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.