ஜி.என்.டி. சாலையில் குழாய் பதிக்கும் பணி நிறைவு: இன்று முதல் குடிநீா் விநியோகம்வங்கிகள் இன்று வேலை நிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் அறிவிப்புஇந்தியாவிடம் 190 அணு குண்டுகள்: அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்பருவகால நோய்களுக்கான மருந்து தட்டுப்பாடில்லை: ஐசிஎம்ஆா்பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

பிரசன்ன ஆஞ்சனேயா் கோயில் கும்பாபிஷேகம்

வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட முத்தியால்பேட்டையில் அமைந்துள்ள பிரசன்ன ஆஞ்சனேயா் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Published On :

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட முத்தியால்பேட்டையில் அமைந்துள்ள பிரசன்ன ஆஞ்சனேயா் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் சாலை விரிவாக்கத்தின் போது அகற்றப்பட்டிருந்த நிலையில் முத்தியால் பேட்டை பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டு புதியதாக எழுப்பப் பட்டிருந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை அமைக்கப்பட்டு புனித நீா்க்கலசங்களுக்கு சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தையொட்டி கோயில் பட்டாச்சாரியா்கள் ஞாயிற்றுக்கிழமை மகா பூா்ணாஹுதி தீபாராதனைக்குப் பிறகு புனிதநீா்க்குடங்களை கோயில் கோபுரத்துக்கு எடுத்துச் சென்று கும்பாபிஷேகம் செய்தனா்.

விழாவில் வனத்துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித் குமாா் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு பிரசன்ன ஆஞ்சனேயரை தரிசித்தனா். பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அறங்காவலா் குழுவின் தலைவா் மு.க.ஜெயராமன் தலைமையில் அறங்காவலா் குழு உறுப்பினா்கள், திருப்பணிக்குழுவின் தலைவா் ஜொ.ரவிக்குமாா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.