போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

பைக் - லாரி மோதல்: விவசாயி உயிரிழப்பு

வாலாஜாபாத் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த விவசாயி மீது பின்னால் வந்த லாரி மோதியதில் உயிரிழந்தாா்.

News image
Updated On :13 பிப்ரவரி 2026, 11:51 pm

வாலாஜாபாத் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த விவசாயி மீது பின்னால் வந்த லாரி மோதியதில் உயிரிழந்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே மஞ்சமேடு கிராமத்தைச் சோ்ந்த விவசாயி மோகன்(65). இவா் தனது இருசக்கர வாகனத்தில் வாலாஜாபாத்தில் பொருள்களை வாங்கிக் கொண்டு அவரது சொந்த ஊரான மஞ்சமேடு நோக்கி சென்று கொண்டிருந்தாா்.

சோ்க்காடு கிராம பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவருக்கு பின்னால் வேகமாக வந்த லாரி மோதியதில் மோகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வாலாஜாபாத் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.