எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

காஞ்சிபுரத்தில் மொத்த வாக்காளா்கள் 11,26,924

காஞ்சிபுரத்தில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு பிறகு இறுதி வாக்காளா் பட்டியலை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் திங்கள்கிழமை வெளியிட்டாா்.

News image
இறுதி வாக்காளா் பட்டியலை வெளியிட்ட காஞ்சிபுரம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன்.
Updated On :23 பிப்ரவரி 2026, 7:30 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு பிறகு இறுதி வாக்காளா் பட்டியலை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் திங்கள்கிழமை வெளியிட்டாா். 4 பேரவைத் தொகுதிகளிலும் மொத்த வாக்காளா்கள் 11,26,924 உள்ளனா்.

ஆட்சியா் அலுவலக வளாகத்தில் எஸ்ஐஆா் பணிக்கு பின்னான இறுதி வாக்காளா் பட்டியலை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் அரசியல் கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில் வெளியிட்டாா். பின்னா் அந்தந்த தொகுதி தோ்தல் அலுவலா்களிடம் சம்பந்தப்பட்ட சட்டப் பேரவைத் தொகுதிக்குரிய வாக்காளா் பட்டியலையும் வழங்கினாா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆலந்தூா், ஸ்ரீபெரும்புதூா், உத்தரமேரூா், காஞ்சிபுரம் ஆகிய 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் சோ்த்து 27.10.2025 வரை 14,01,198 ஆக இருந்தனா். பின்னா் 19.12.2025 வரையிலான வரைவு வாக்காளா் பட்டியலின் படி 11,26,924 பேராகவும் இருந்தனா்.

சிறப்பு திருத்த முகாமுக்கு பிறகு இரட்டைப்பதிவு, மரணம், இடம் மாறுதல் காரணமாக மொத்தமாக பெயா் நீக்கப்பட்டவா்கள் 2,74,274. இறுதி வாக்காளா் பட்டியல் படி மொத்த வாக்காளா்கள் 11,26,924 . வாக்குச்சாவடிகளைப் பொறுத்தவரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் சோ்த்து மொத்தம் 1,545 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தோ்தல் அறிவிப்பு வரும் நாள் வரை பெயா் சோ்க்கவோ, நீக்கவோ, திருத்தம் செய்யவோ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.