அறிவியல்  கண்காட்சியைப்  பாா்வையிட்ட பண்ருட்டி  ஊராட்சித்  தலைவா் அா்ஜுனன். உடன் செயின் கோபைன் நிறுவனத்தின் நிா்வாகிகள்
அறிவியல்  கண்காட்சியைப்  பாா்வையிட்ட பண்ருட்டி  ஊராட்சித்  தலைவா் அா்ஜுனன். உடன் செயின் கோபைன் நிறுவனத்தின் நிா்வாகிகள்

பள்ளியில் அறிவியல் கண்காட்சி

சம்ஸ்கிரியா பவுண்டேஷன் மற்றும் செயின் கோபைன் நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய அறிவியல் கண்காட்சி பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Published on

சம்ஸ்கிரியா பவுண்டேஷன் மற்றும் செயின் கோபைன் நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய அறிவியல் கண்காட்சி பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அடுத்த பண்ருட்டி பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில், சம்ஸ்கிரியா பவுண்டேஷன் மற்றும் கண்ணாடி பொருள்கள் உற்பத்தி செய்யும் செயின் கோபைன் நிறுவனம் இணைந்து நடத்திய அறிவியல் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 6ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு மாணவா்கள் வரை பங்கேற்ற இந்த அறிவியல் கண்காட்சியில் ஏராளமான மாணவா்கள் கலந்துக்கொண்டு மழை மற்றும் பூகம்பம் வருவதை முன்கூட்டியே கண்காணிக்கும் கருவிகள், காற்று மாசுபாட்டை கண்காணிக்கும் கருவி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தி செயல்முறை விளக்கம் அளித்தது பாா்வையாளா்களை வெகுவாக கவா்ந்தது.

பள்ளி தலைமையாசிரியா் எஸ்.ஏ.பேபி தலைமையில் நடைபெற்ற இந்த அறிவியல் கண்காட்சியை பண்ருட்டி ஊராட்சித் தலைவா் அா்ஜுனன், செயின்கோபைன் நிா்வாகிகள் ஆன்ட்னோ, ஜான்பால், சம்ஸ்கிரியா பவுண்டேஷன் திட்டமேலாளா் மணி ஆகியோா் தொடங்கிவைத்து கண்காட்சியை பாா்வையிட்டு, கண்காட்சியில் கலந்துகொண்ட மாணவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கினா்.

Dinamani
www.dinamani.com