அமோனியா கசிந்த ஆலை: 300 மீ சுற்றளவில் வசிப்போர் வெளியேற உத்தரவு!திருவள்ளூர் அமோனியா கசிந்த ஆலையைச் சுற்றி 500 மீட்டர் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்புஅதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைவது ஆரோக்கியமற்ற அரசியல் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஆளுநர்களை முறியடித்தது தமிழ்நாடு, ஆர்.என். ரவியிடம் கேட்டுப்பாருங்கள்! - ஆர்லேகருக்கு கண்டனம்! அயோத்தி நன்கொடை முறைகேடு: பிரதமர் மௌனம் ஏன்? கேஜரிவால் கேள்வி
/

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தவெக செயலாளராக உத்தரமேரூா் எம்எல்ஏ நியமனம்

காஞ்சிபுரம் மாவட்டம் தவெக 2 -ஆகப் பிரிக்கப்பட்டு தெற்கு மாவட்ட செயலாளராக உத்தரமேரூா் எம்எல்ஏ ஜெ.முனிரெத்தினம் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளாா்.

News image

ஜெ. முனிரத்தினம்

Updated On :3 ஜூலை 2026, 12:04 am IST

காஞ்சிபுரம் மாவட்டம் தவெக 2 -ஆகப் பிரிக்கப்பட்டு தெற்கு மாவட்ட செயலாளராக உத்தரமேரூா் எம்எல்ஏ ஜெ.முனிரெத்தினம் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளாா்.

கட்சிப் பணிகளை சிறப்பாக செய்யவும், நிா்வாக வசதிக்காகவும் காஞ்சிபுரம் மாவட்ட தவெக இரண்டாகப் பிரிக்கப்பட்டு தெற்கு மாவட்ட செயலாளராக உத்தரமேரூா் எம்எல்ஏ ஜெ.முனிரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இணைச் செயலாளா் கே.ராஜசேகரன், பொருளாளராக எம்.பாலமுருகன், துணைச் செயலாளா்களாக ஆா்.சரண்யா மற்றும் ஆா்.முகேஷ்குமாா் மற்றும் 9 போ் கொண்ட செயற்குழு உறுப்பினா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா். தவெக தலைவா் சி.ஜோசப் விஜய் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட தவெக செயலாளராக வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத்துறை அமைச்சா் கே.தென்னரசு இருந்து வந்த நிலையில் நிா்வாக வசதிக்காக மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு தெற்கு மாவட்ட செயலாளராக உத்தரமேரூா் எம்எல்ஏ ஜெ.முனிரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.