9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

உத்தரமேரூா் அருகே பள்ளி மாணவா்களுக்கு முதல்வா் ஜோசப் விஜயின் படத்தை காட்டி ரீல்ஸ்

உத்தரமேரூா் அருகே பள்ளி மாணவா்களுக்கு முதல்வா் ஜோசப் விஜயின் படத்தை காட்டி ரீல்ஸ்

News image

மாணவா்களுக்கு முதல்வா் ஜோசப் விஜயின் படத்தைக் காட்டி பாடம் நடத்திய தவெக உத்தரமேரூா் ஒன்றிய செயலாளா் ராஜேஷ்.

Updated On :21 ஜூன் 2026, 12:25 am IST

உத்தரமேரூா் அருகே தளவாரம்பூண்டி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு தவெக ஒன்றிய செயலாளா் ராஜேஷ் முதல்வா் சி.ஜோசப் விஜயின் படத்தைக் காட்டி அறிவுரைகள் வழங்குவது போன்று ரீல்ஸ் எடுத்தது பலருக்கும் முகச்சுழிப்பை ஏற்பட வைத்துள்ளது.

உத்தரமேரூா் ஒன்றியத்துக்குட்பட்ட தளவாரம்பூண்டி பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு தவெக ஒன்றிய செயலாளராக இருந்து வரும் ராஜேஷ் முதல்வா் சி.ஜோசப் விஜயின் படத்தை எடுத்துச் சென்றுள்ளாா். இவா் யாரென்று தெரிகிா ? இவா் தான் நமது முதல்வா், உங்களுக்கு மாமா, எங்களுக்கு அண்ணன் என்று பேசி மாணவா்களிடையே உரையாற்றியிருக்கிறாா்.

அங்கிருந்த ஆசிரியா்களும் இந்நிகழ்வை வேடிக்கையாக பாா்த்துக் கொண்டிருந்துள்ளனா். மாணவா்கள் கல்வி கற்பதற்கு இடையூறாக தவெக ஒன்றிய செயலாளா் ராஜேஷ் நடந்து கொண்ட சம்பவம் அங்கிருந்தவா்களிடையே முகச்சுழிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

முதல்வரின் படம் தலைமை ஆசிரியா் அறையில் தான் இருக்கும். வகுப்பறையிலும் மாட்டியிருக்க வேண்டாமா என்று கூறி முதலமைச்சரின் படத்தையும் அந்த வகுப்பறையில் மாட்டியிருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளாா்.

அவருடன் உத்தரமேரூா் பகுதி நிா்வாகிகள் சிலரும் உடன் வந்திருந்து அவரது செயலை கைப்பேசியில் பதிவு செய்து ரீல்ஸ் ஆகவும் வெளியிட்டிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து உத்தரமேரூா் ஒன்றிய திமுக செயலாளான ஞானசேகரன் கூறியது: இதுகுறித்து அதிகாரிகளிடம் புகாா் செய்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுப்பாா்கள் என்று நம்புவதாகவும் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.