உத்தரமேரூர் அருகே தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தவெக ஒன்றிய செயலாளர் ராஜேஷ் முதல்வர் சி.ஜோசப் விஜய்யின் படத்தைக் காட்டி அறிவுரைகள் வழங்குவது போன்று ரீல்ஸ் எடுத்தது, சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்ட நிலையில், தவெகவில் இருந்து ராஜேஷ் நீக்கப்பட்டுள்ளார்.
உத்தரமேரூர் ஒன்றியத்துக்குட்பட்ட தளவாரம்பூண்டி பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தவெக ஒன்றிய செயலாளராக இருந்து வரும் ராஜேஷ் முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் படத்தை எடுத்துச் சென்றுள்ளாா். இவா் யாரென்று தெரிகிறதா ? இவர் தான் நமது முதல்வர், உங்களுக்கு மாமா, எங்களுக்கு அண்ணன் என்று பேசி மாணவர்களிடையே உரையாற்றியிருக்கிறார்.
அங்கிருந்த ஆசிரியர்களும் இந்நிகழ்வை வேடிக்கையாக பார்த்துக் கொண்டிருந்துள்ளனர். மாணவர்கள் கல்வி கற்பதற்கு இடையூறாக தவெக ஒன்றிய செயலாளர் ராஜேஷ் நடந்து கொண்ட சம்பவம் அங்கிருந்தவர்களிடையே முகச்சுழிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
முதல்வரின் படம் தலைமை ஆசிரியர் அறையில் தான் இருக்கும். வகுப்பறையிலும் மாட்டியிருக்க வேண்டாமா என்று கூறி முதலமைச்சரின் படத்தையும் அந்த வகுப்பறையில் மாட்டியிருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அவருடன் உத்தரமேரூர் பகுதி நிர்வாகிகள் சிலரும் உடன் வந்திருந்து அவரது செயலை கைப்பேசியில் பதிவு செய்து ரீல்ஸ் ஆகவும் வெளியிட்டிருப்பது சமூக வலைதளங்களில் வைரலானது.
இதற்கு, பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்த நிலையில், தவெக ஒன்றிய செயலாளர் ராஜேஷ், அந்தக் கட்சியிலிருந்து நீக்கபட்டுள்ளார்.
இது தொடர்பாக தவெக தலைமை வெளியிட்ட அறிக்கையில், “காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி, உத்திரமேரூர் மேற்கு ஒன்றிய செயலாளராக பொறுப்பு வகித்து வந்த ஏ. ராஜேஷ் கட்சியின் நற்பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், அவர் வகித்து வந்த ஒன்றிய செயலார் மற்றும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கப்படுகிறார்.
எனவே கட்சி நிர்வாகிகளும் தோழர்களும் அவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உத்தரமேரூா் அருகே பள்ளி மாணவா்களுக்கு முதல்வா் ஜோசப் விஜயின் படத்தை காட்டி ரீல்ஸ்

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly
முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் வெற்றியா? | TVK | CM Vijay | PM Modi | Rahul | Vijay Delhi Visit








