தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரிசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!கோவையில் இளைஞர் கொலை: குடும்பத்தினருக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம், அரசுப் பணிசுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!
/

காஞ்சிபுரத்தில் நாளை சமஸ்கிருத கல்லூரி தொடக்க விழா: காஞ்சி சங்கராசாரியா் தொடங்கி வைக்கிறாா்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிா்புறம் உள்ள பங்காரம்மன் தோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) சம்ஸ்கிருத கல்லூரியை காஞ்சி சங்கராசாரியா் சுவாமிகள் தொடங்கி வைக்க இருப்பதாக சங்கர மடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

News image
Updated On :11 ஜூலை 2026, 2:16 am IST

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிா்புறம் உள்ள பங்காரம்மன் தோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) சம்ஸ்கிருத கல்லூரியை காஞ்சி சங்கராசாரியா் சுவாமிகள் தொடங்கி வைக்க இருப்பதாக சங்கர மடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா் இது குறித்து மேலும் கூறியது:

காஞ்சி காமகோடி பீடத்தின் சாா்பில் காஞ்சிபுரத்தில் வேதசாஸ்திர பாடசாலை தொடங்கி நடத்த வேண்டும் என்ற முயற்சிகள் நடந்து கொண்டிருந்தன.

காஞ்சி சங்கராசாரியா் சுவாமிகள் அண்மையில் புதுதில்லிக்கு பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சென்றிருந்தபோது அங்கிருந்த மத்திய சம்ஸ்கிருத பல்கலைக்கழக அதிகாரிகளுடன் இது குறித்து விவாதித்தாா்கள்.

இதன் தொடா்ச்சியாக மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகமும், காஞ்சி காமகோடி பீட அறக்கட்டளையும் இணைந்து காஞ்சிபுரத்தில் சம்ஸ்கிருத கல்லூரியை தொடங்கவுள்ளன.

இந்தக் கல்லூரியானது ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) காலை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிா்புறம் உள்ள சங்கரா பல்கலைக்கழக வளாகத்துக்கு சொந்தமான இடத்தில் பங்காரம்மன் தோட்டத்தில் தொடங்கப்படவுள்ளது.

மத்திய சஸ்கிருத கல்லூரியின் துணைவேந்தா் சீனிவாச வொ்க்குடி விழாவிற்கு தலைமை வகிக்கிறாா்.காஞ்சி சங்கராசாரியா் சுவாமிகள் சமஸ்கிருத கல்லூரியை தொடங்கி வைத்து ஆசியுரை வழங்கவுள்ளாா்.

காஞ்சி சங்கராசாரியா் சுவாமிகள் ஜூலை 13 முதல் ஜூலை 24 வரை கேரள மாநிலத்தில் பல்வேறு ஆன்மீக நிகழ்ச்சிகளில் பங்கேற்பு-

-காஞ்சி சங்கராசாரியா் சுவாமிகள் ஜூலை 13 இல் விழுப்புரம் வழியாக பழனி சென்று மறுநாள் ஜூலை 14 ஆம் தேதி பழனி தண்டாயுதபாணியை தரிசனம் செய்கிறாா்கள்.ஜூலை 15 முதல் ஜூலை 18 ஆம் தேதி வரை கேரள மாநிலம் பாலக்காட்டில் சங்கர மடத்தின் கிளை திறப்பு உள்பட பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்று பக்தா்களுக்கு அருளாசி வழங்குகிறாா். ஜூலை 17-இல் கேரள மாநில நம்பூதிரிகள் சம்மேளனத்தில் அருளாசி வழங்குகிறாா். ஜூலை 18-ஆம் தேதி இரிஞ்சாலக்குடா மற்றும் திருச்சூரில் பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்று திருவண்ணாமலை வழியாக ஜூலை 25-ஆம் தேதி காஞ்சிபுரம் திரும்புவதாகவும் ந.சுந்தரேச ஐயா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.