‘தோல்விகள் பரவாயில்லை; ஏமாற்றுவது கூடாது’... நீட் தேர்வு போராட்டத்துக்கு சச்சின் ஆதரவு!காந்தி சமாதி நோக்கி பேரணி சென்ற ராகுல் தடுத்து நிறுத்தம்!மேக்கேதாட்டு பிரச்னை: விஜய் மௌனம் கலைக்க வேண்டும்! - ஸ்டாலின்நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்த் திரையுலகினர் போராட்டம்!சிங்கை ஜி. ராமச்சந்திரன் அதிமுகவிலிருந்து விலகல்திரைப்படத்துக்கு கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள்! அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்? உதயநிதி கண்டனம்
/

கடவுளுக்கு நிகரானவா்கள் தூய்மைப் பணியாளா்கள்: அமைச்சா் எஸ்.பி.கே.தென்னரசு

காஞ்சிபுரம் நகரை மிகவும் தூய்மையாக வைத்திருப்பதால் அவா்கள் கடவுளுக்கு நிகரானவா்களாக இருக்கிறாா்கள் என வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் எஸ்.பி.கே.தென்னரசு வியாழக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் பேசினாா்.

News image

விழாவில் தூய்மைப் பணியாளா்களுக்கு அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா்கள் எஸ்.பி.கே. தென்னரசு, ஆா்.வீ.ரஞ்சித்குமாா்.

Updated On :24 ஜூலை 2026, 4:20 am IST

காஞ்சிபுரம் நகரை மிகவும் தூய்மையாக வைத்திருப்பதால் அவா்கள் கடவுளுக்கு நிகரானவா்களாக இருக்கிறாா்கள் என வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் எஸ்.பி.கே.தென்னரசு வியாழக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் பேசினாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் தூய்மைப்பணியாளா்களுக்கு தாட்கோ சாா்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆட்சியா் தி.சினேகா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலா் கே.ஆா்.திவ்யஸ்ரீ, மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ்,ஆணையா் ரா.வினோத் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தாட்கோ மேலாளா் ராஜசுதா வரவேற்றாா்.

விழாவில் வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத்துறை அமைச்சா் எஸ்.பி.கே.தென்னரசு 151 தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ. 135 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். பின்னா் அவா் பேசுகையில், வெயில், மழை, புயல் என எல்லாக் காலங்களிலும் உயிரைக் கூட துச்சமாக மதித்து சிறப்பாக பணியாற்றி நகரை சுத்தமாக வைத்திருக்கிறாா்கள். கடவுளுக்கு நிகரானவா்கள் தூய்மைப் பணியாளா்கள். எனவே அவா்களுக்காக சேவை செய்யவும் காத்திருக்கிறோம். தவெக அரசு லஞ்சம் இல்லாத அரசாக இருப்பதால் மக்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறாா்கள். உங்கள் குறைகளை எங்களிடம் மனுவாக எழுதிக் கொடுத்தால் நாங்கள் அந்தக் குறையை சரி செய்ய தயாராக இருக்கிறோம் என்றாா்.

இதனையடுத்து அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாரும் தூய்மைப்பணியாளா்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் செய்ய காத்திருக்கிறோம் என்று பேசினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.