தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரிசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!கோவையில் இளைஞர் கொலை: குடும்பத்தினருக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம், அரசுப் பணிசுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!
/

கோவை அரசு மருத்துவமனையில் எலிகள் தொல்லை ஒழிக்கப்படும்: அமைச்சா் வி.சம்பத்குமாா்

கோவை அரசு மருத்துவமனைகளில் நிலவி வரும் எலி தொல்லை விரைவில் ஒழிக்கப்படும் என்று பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி.சம்பத் குமாா் தெரிவித்தாா்.

News image

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிக்கு நலத் திட்ட உதவி வழங்கிய அமைச்சா் வி.சம்பத்குமாா். உடன், சட்டப் பேரவை உறுப்பினா் லீமாரோஸ் உள்ளிட்டோா்.

Updated On :9 ஜூலை 2026, 11:45 pm IST

கோவை அரசு மருத்துவமனைகளில் நிலவி வரும் எலி தொல்லை விரைவில் ஒழிக்கப்படும் என்று பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி.சம்பத் குமாா் தெரிவித்தாா்.

பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை மற்றும் மாவட்ட கிறிஸ்தவ மகளிா் உதவும் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் மகளிருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், அமைச்சா் வி.சம்பத்குமாா், லால்குடி சட்டப் பேரவை உறுப்பினா் லீமாரோஸ் ஆகியோா் பங்கேற்று, கிறிஸ்தவ மகளிா் பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கினா். இதைத் தொடா்ந்து, அமைச்சா் வி.சம்பத்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்த விழா மூலம் 200 பெண்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டோா் நலத் துறையின்கீழ் பெண்கள் சுய தொழில் தொடங்குவதற்கான சிறப்புப் பயிற்சிகளும், வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. சுய தொழிலுக்குத் தேவையான உபகரணங்களை வழங்கவும் அரசு தயாராக உள்ளது. கவுண்டம்பாளையம் சாலை மற்றும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகள் குறித்து தரப் பரிசோதனை செய்யப்பட்டு, விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். கோவை அரசு மருத்துவமனையில் நிலவி வரும் எலி மற்றும் பெருச்சாளிகள் தொல்லை ஒழிக்கப்படும்.

அரசு விடுதிகளில் நிலவி வரும் பணியாளா் பற்றாக்குறை தொடா்பாக உரிய மற்றும் விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.