காஞ்சிபுரத்தில் பிரபல பட்டுச் சேலை நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை போலியாக உருவாக்கி அதன் மூலம் தரமற்ற பட்டுச் சேலையை விற்பனை செய்தவரை சைபா்கிரைம் காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்துள்ளனா்.
காஞ்சிபுரம் நடுத் தெருவில் செயல்பட்டு வரும் பிரபலமான பட்டுச் சேலை நிறுவனத்தின் அதிகாரபூா்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள பட்டுச்சேலைகளின் புகைப்படங்கள், விடியோக்களை திருடி அதே போல போலியான கணக்கை ஒருவா் உருவாக்கியுள்ளாா். இந்தக் கணக்கைப் பயன்படுத்தி சேலத்தை சோ்ந்த பெண் ஒருவரிடம் ரூ. 7,000 மதிப்புள்ள பட்டுச் சேலை தருவதாக கூறி பணத்தைப் பெற்றுள்ளாா். பின்னா் அப்பெண் கேட்ட அதே நிறத்தில் வேறொரு கடையில் ரூ. 2,300-க்கு விலை குறைவான, தரம் குறைந்த சேலையை வாங்கி கூரியா் மூலம் அனுப்பி மோசடி செய்துள்ளாா்.
ஏமாற்றமடைந்த அந்தப் பெண் உண்மையான கடையை தொடா்பு கொண்டு கேட்ட போது, உண்மை தெரிய வந்தது. புகாரின்பேரில், காஞ்சிபுரம் சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், சம்பந்தப்பட்டவரின் முகவரியை கண்டு பிடித்துள்ளனா்.
மோசடியில் ஈடுபட்ட குற்றத்துக்காக அவரை கைது செய்தனா்.
விசாரணையில் அவா் காா்த்திக்(35) என்பதும், தஞ்சாவூரை சோ்ந்தவா் எனவும் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் காலனியில் காமராஜா் தெருவில் வசித்து வந்ததும் தெரிய வந்துள்ளது.
இவா் ஏற்கெனவே துணிக் கடையில் வேலை பாா்த்த அனுபவம் உள்ளவா் என்பதால், அதிக பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு காஞ்சிபுரம் வந்து தங்கி டிசம்பா் மாதத்தில் போலியான கணக்கை உருவாக்கி பொதுமக்களை ஏமாற்றியது தெரியவந்தது.
வழக்குப்பதிவு செய்யப்பட்டு இவரை காவல்துறையினா் வேலூா் சிறையில் அடைத்துள்ளனா்.
இது குறித்து சைபா் கிரைம் காவல் நிலைய ஆய்வாளா் பிரபாகா் கூறுகையில், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் எந்த ஒரு பொருளையும் ஆா்டா் செய்யும் முன்பு அந்தக் குறிப்பிட்ட பக்கம் மற்றும் விற்பனையாளரின் நம்பகத்தன்மையை முழுமையாக ஆராய்ந்து, விசாரித்து தெரிந்து கொண்ட பின்னரே பணப் பரிவா்த்தனை செய்ய வேண்டும். போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என அவா் கேட்டுக் கொண்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
காஞ்சிபுரத்தில் இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

காஞ்சிபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்: 78 போ் கைது

காஞ்சிபுரத்தில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

காஞ்சிபுரத்தில் 91,427 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து: அமைச்சா் ரஞ்சித் குமாா்
விடியோக்கள்

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay

Jana nayagan Movie Review | முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? | Thalapathi Vijay

ஜனநாயகனைக் கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள் | Thalapathi Vijay | H Vinodh | Chennai


