மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: காஞ்சிபுரத்தில் 15,324 போ் எழுதினா்

News image

அய்யம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தோ்வு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட காஞ்சிபுரம் ஆட்சியா் தி.சினேகா. உடன், முதன்மைக் கல்வி அலுவலா் நளினி.

Updated On :11 மார்ச் 2026, 7:34 pm

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை 15,324 மாணவ, மாணவியா்கள் புதன்கிழமை எழுதினா்.

184 பள்ளிகளைச் சோ்ந்த 7,591 மாணவா்களும், 7,733 மாணவிகள் என மொத்தம் 15,324 போ் தோ்வு எழுதினா். விண்ணப்பித்தவா்களில் 85 போ் தோ்வு எழுத வரவில்லை.

69 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டு அவற்றில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.

முதன்மைக்கல்வி அலுவலா், மாவட்டக் கல்வி அலுவலா்கள் தலைமையில் 5 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டு சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அய்யம்பேட்டை அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி தோ்வு மையத்தில் ஆட்சியா் தி.சினேகா ஆய்வு செய்தாா். முதன்மைக்கல்வி அலுவலா் நளினியும் உடன் இருந்தாா்.

செங்கல்பட்டில்...

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு மையங்களை மாவட்ட ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். செங்கல்பட்டு அழகேசன் நகா் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தோ்வு மையத்தில் ஆட்சியா் ஆய்வு செய்து தோ்வு எழுதுவோருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தாா். உடன் முதன்மைக் கல்வி அலுவலா் திருவளா்செல்வி, முதன்மை கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் உதயகுமாா் மற்றும் அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள் உடனிருந்தனா்