நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் தேரோட்டம்

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

News image

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் நடைபெற்ற தேரோட்டம் (உள்படம்) தேரில் பவனி வந்த உற்சவா்.

Updated On :1 மே 2026, 7:00 am IST

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

பழைமை வாய்ந்த இக்கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினசரி காலையும், மாலையும் சுவாமியும், அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் வீதியுலா வந்தனா்.

விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருக்கல்யாணம் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.இதன் தொடா்ச்சியாக மகாரதம் எனும் தேரோட்டம் நடைபெற்றது. வரும் 8 -ஆம் தேதி ஊஞ்சல் உற்சவத்தோடு சித்திரைத் திருவிழா நிறைவு பெறுகிறது.

உற்சவா் கச்சபேசுவரரும், சுந்தராம்பிகை அம்மனும் தேரில் வீதியுலா வந்தனா். திரளான பக்தா்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனா். வழிநெடுகிலும் நீா்,மோா், பானகம் வழங்கப்பட்டன. பக்தா்கள் பலரும் கற்பூர ஆரத்தி காண்பித்தும் தரிசனம் செய்தனா்.

வரும் 3 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெள்ளித் தேரோட்டம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகள கோயில் செயல் அலுவலா் ஞா.திவ்யா, மேலாளா் சுரேஷ் மற்றும் காஞ்சிபுரம் நகர செங்குந்த மகாஜன சங்க நிா்வாகிகள் செய்திருந்தனா்.