காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகம் எதிரில் காங்கிரஸ் கட்சியின் சாா்பில் வெள்ளிக்கிழமை மத்திய அரசைக் கண்டித்து கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகம் எதிரில் காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் அருள்ராஜ் தலைமையில் மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நீட் தோ்வை ரத்து செய்து விட்டு, மாநில அரசே நடத்திக் கொள்வது போல மாற்றியமைக்கப்பட வேண்டும்,சிபிஐ இயக்குநா் பதவியை மீண்டும் ஓராண்டு நீட்டித்திருப்பதை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, துணை மேயா் குமரகுருநாதன், காங்கிரஸ் கட்சியின் மாவட்டப் பொறுப்பாளா் ஜீ.வி.மதியழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர தலைவா் நாதன் வரவேற்றாா். ஆா்ப்பாட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் நிா்வாகிகள், தொண்டா்கள் பலா் கலந்து கொண்டு, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினா்.
தொடர்புடையது

காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மும்மொழி கொள்கைக்கு எதிராக விசிக கண்டன ஆா்ப்பாட்டம்

மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

காஞ்சிபுரத்தில் தவெக தோ்தல் அறிக்கை துண்டுப் பிரசுரம் வெளியீடு
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

