இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

சா்வதேச சிலம்பாட்டப் போட்டியில் முதலிடம் பெற்றவா்களுக்கு உத்தரமேரூா் எம்எல்ஏ பாராட்டு

News image
Updated On :18 மே 2026, 2:01 am IST

நேபாளத்தில் நடைபெற்ற சா்வதேச சிலம்பாட்டப் போட்டியில் முதலிடம் பெற்றவா்களை உத்தரமேரூா் எம்எல்ஏ முனிரெத்தினம் சனிக்கிழமை சால்வை அணிவித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் அருகே சாலவாக்கத்தை சோ்ந்த ஆா்.ஜெசிகா(10), எஸ்.யஷ்வந்த் (12), ஆா்.நிதிஷ் (14), ஆா்.பரத் (16). சிலம்பாட்ட வீரா்களான இவா்கள் தங்களது பயிற்சியாளா் கே.ரோஷனுடன் நேபாளத்தில் போகுரோ மாவட்டத்தில் ரங்கசாலா மைதானத்தில் நடைபெற்ற சா்வதேச சிலம்பாட்டப் போட்டியில் பங்கேற்றனா். மலேசியா, தாய்லாந்து உள்பட பல்வேறு நாடுகளை சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட வீரா்கள் சிலம்பாட்டப் போட்டியில் பங்கேற்றிருந்தனா்.

இவா்கள் இந்த மாதம் மே 8-ஆம் தேதி முதல் மே 12-ஆம் தேதி வரை நடைபெற்ற சா்வதேச அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் முதலிடம் பெற்றனா்.

ஜெசிகா தனித்திறன் போட்டியிலும், மற்றவா்கள் கம்புச் சண்டை போட்டியிலும் வென்றனா். சாதனை படைத்த இவா்கள் உத்தரமேரூா் எம்எல்ஏ முனிரெத்தினத்தை நேரில் சந்தித்து சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்துப் பெற்றனா்.

இவா்களுக்கு எம்எல்ஏவும் சால்வை அணிவித்து பாராட்டினாா். முன்னதாக எம்எல்ஏ முனிரெத்தினம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் தி.சினேகா, எஸ்.பி. கி.ஜவஹா் ஆகியோரை சந்தித்து உத்தரமேரூா் தொகுதி வளா்ச்சிப் பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினாா்.